உக்ரைன் மற்றும் நட்பு நாடுகளுக்கு கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், தற்போது ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 675 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளது
ஜேர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க விமான தளத்தில் பலநாட்டு சக அமைச்சர்களுடனான சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த உதவியில் ஹோவிட்சர்கள், வெடிமருந்துகள், ஹம்வீ வாகனங்கள், கவச ஆம்புலன்ஸ்கள் மற்றும் யுத்த தாங்கி எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்கு 13 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை உறுதியளித்துள்ளது.
உக்ரைன் மற்றும் அதன் 18 அண்டை நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த முதலீடுகள் வடிவில் நீண்ட கால உதவியாக 2.6 பில்லியன் டொலர்களை பைடன் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இதில் நேட்டோ உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் எதிர்காலத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பு அபாயத்தில் உள்ள நாடுகளும் அடங்கும்.