சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, டிலான் பெரேரா, அனுரகுமார திஸாநாயக்க, அஜித் மான்னப்பெரும, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, அசோக் அபேசிங்க உள்ளிட்டவர்களே எதிராக வாக்களித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது சபையில் இல்லாத மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 123 ஆகும்.
இதனையடுத்து, மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி அங்கீகரிக்கப்பட்டது