வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது என்று அழைத்தார். மேலும் அணுவாயுதமயமாக்கல் தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.
இது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அணு ஆயுதத் தாக்குதலுக்கு முன்பான தாக்குதலைப் பயன்படுத்துவதற்கு நாட்டின் உரிமையையும் சட்டம் உறுதி செய்கிறது.
பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், வடகொரியா 2006ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆறு அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறும் வகையில், தொடர்ந்து நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.