தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு டெண்டர் முறையின் மூலம் நிலக்கரியை வழங்குவதற்கு இணங்கிய நிறுவனம் அதற்கு முன்வர தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.