இராமேஸ்வர மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்,
இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
இந்தக் கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர், இந்த ஆலோசனைக்கு பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும்,
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படை சிறைபிடிக்கப்பட்ட 115 படகுகளுக்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது,
இதில் எஞ்சிய 7 படகுகளுக்கும் அதே சேதமடைந்த 30 படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்,
வரலாறு காணாத டீசல் விலை உயர்வு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது,
தற்போது தமிழக அரசால் வழங்கி வருகின்ற 1800 லிட்டர் மானிய டீசலை 3000 லிட்டர் ஆக உயர்த்தி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்,
இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வரும் செவ்வாய்க்கிழமை 13 ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாண ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 மேற்பட்ட விசை படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன,
இந்த தொழிலில் நேரடியாகவும் சார்பு தொழிலாகவும் பத்தாயிரத்து மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.