இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் என சமந்தா பவர் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு உரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மேலதிகமாக 40 மில்லியன் டொலர் நிதியுதவியை நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது விஜயத்தை அடுத்து இலங்கைக்கு மொத்தம் 60 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.