சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
அவருடன் நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவும் இன்று காலை கட்டார் ஏர்வேஸ் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தோஹா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு வந்திருந்தார்.
நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்தது.
அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரை அவர் இதன்போது சந்தித்திருந்தார்.
அவரது விஜயத்தை அடுத்து இலங்கைக்கு மொத்தம் 60 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.