நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணை நகரசபை தலைவரின் வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதுடைய இவர் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குருநாகல் உள்ளுராட்சி மன்ற தலைவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கடை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 37 வயதுடைய தொரடியாவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.