அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சம்பளமற்ற விடுமுறை வழங்கும் அரசாங்கத்தின் சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களின் மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காகவே அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாங்கள் தற்போது இந்த சுற்றறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.