அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியாவிற்கும் ஜோர்ஜியா மாநிலத்திற்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் ஈடுபட்டுள்ளார்.
அவர், இந்தியாவின் எக்சிம் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் மூத்த நிர்வாகிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
அத்துடன், கோடக் மகேந்திரா, வங்கி மஹிந்திரா குழுமம், டாடா குழுமம் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் ஆகிய தரப்பினரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
அத்துடன், மஹாராஷ்டிராவில் சதுர்த்தியின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில் பிரபாதேவியில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயக் கணபதி கோவிலுக்கு செனற ஓசாஃப் மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியான ஜமா மஸ்ஜிதையும் அவர் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர், “மும்பை முழுவதும் எங்களுக்கு கிடைத்த அன்பான வரவேற்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
அமெரிக்கா – இந்தியா உறவை வலுப்படுத்த நான் உழைக்கும் போது மேலும் பயனுள்ள உரையாடலை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.“ என்றார்.
அதேநேரம், எட்டுநாள் விஜயமாக வந்திருந்த அவர், அமெரிக்க – இந்தியா வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து இந்தியாவுக்கான மூத்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரி மாணவர்களுடன் ‘இளைஞர்கள் மற்றும் அடுத்த தலைமுறையின் சவால்கள்’ குறித்து கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்றார்.
செனட்டர் ஓசோஃப் தனது 35 வயதில் அமெரிக்க செனட்டராக தெரிவு செய்யப்பட்டதோடு மிக இளவயது செனட்ட என்ற பெருமைக்கும் உரியவர் ஆவார்.
அவர் ஜோர்ஜியா மாகாணத்தில் இருந்து தெரிவாகியுள்ளதோடு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரங்கள் வங்கி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் விதிகள் குழுக்கள். புலனாய்வுகளுக்கான உள்நாட்டுப் பாதுகாப்பு நிரந்தர துணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
அத்துடன், செனட்டர் பதவியை ஏற்பதற்கு முன்னதாக, அவர் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்காக ஊழல் போர்க்குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை விசாரித்து அம்பலப்படுத்திய குழுவை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.