தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் என அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தேசிய அரசாங்கங்கள் என்பது புதிய கருத்தல்ல எனவும் அரசியலமைப்பில் தேசிய பேரவை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசியப் பேரவைக்கு நிறைவேற்று அதிகாரம் இல்லை என்றும், அது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஒரு வேளை உணவு கிடைக்காத 12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு விசித்திரக் கதைகள் கூறுவது போன்று உள்ளதாகவும் டலஸ் அழகப்பெரும குற்றம் சாட்டினார்.
எனவே அரசாங்கம் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஒன்றிணைந்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.