நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடினார்.
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் வலுவான உறவை கட்டியெழுப்புவதாகவும், இதில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சப்ரி இதன்போது தெரிவித்தார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 77வது அமர்வில் கலந்துகொள்ள சென்றுள்ள அலி சப்ரி, பல நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதன்படி சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு மற்றும் ஆர்மீனியா வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
நாடுகளுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 24ஆம் திகதி ஐ.நா பொதுச் சபை அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.