தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பகுதிகளில் அவசரமாக பொது வாக்கெடுப்பு நடத்த மொஸ்கோ திட்டமிட்டுள்ளதை மேற்கத்திய நாடுகள் கண்டித்துள்ளன.
ரஷ்யாவின் ஒரு பகுதியாக நான்கு உக்ரேனிய பிராந்தியங்களை மாற்றும் வகையில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகைய மோசமான வாக்கெடுப்பின் முடிவுகளை அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒருபோதும் அங்கீகரிக்காது என அறிவித்துள்ளன.
ஆக்கிரமித்துள்ள படைகளால் நடத்தப்படும் எந்தவொரு வாக்கெடுப்பும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும் அதில் எந்த சட்டப்பூர்வ தன்மையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளன.
ஒரு பெரிய உக்ரேனிய எதிர்த்தாக்குதலுக்குப் பின்னர் 8,000 சதுர கிமீ பரப்பை ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் கைப்பறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.