சிம்பாப்வே மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என செனகல் ஜனாதிபதி மேக்கி சால் நியூயோர்க்கில் 77வது ஐநா பொதுச் சபையில் அழைப்பு விடுத்தார்.
சிம்பாப்வேக்கு எதிரான நடவடிக்கைகள் மக்களின் துன்பத்தை மோசமாக்குவதாக செனகல் தலைவரும், ஆபிரிக்க ஒன்றியத்தின் தற்போதைய தலைவருமான மேக்கி சால் கூறினார்.
மேலும் பாதுகாப்பு சபை மற்ற மோதல்களுக்கு தீர்வு காண்பது போலவே ஆபிரிக்காவில் உள்ள மோதல்களுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஜனநாயகம் இன்மை மனித உரிமைகள் மீறல்கள், ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் முன்னேற்றம் இல்லாததைக் காரணம் காட்டி, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இந்த பொருளாதாரத் தடைகள் ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வா உட்பட. குறிப்பிட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டையும் குறிவைத்து விதிக்கப்பட்டன.
சிம்பாப்வேயின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக அதிக பணவீக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
பொதுச் சபையில் உரையாற்றிய முதல் ஆபிரிக்க தலைவர் ஜனாதிபதி மேக்கி சால் என்பதும் குறிப்பிடத்தக்கது.