கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாக சட்டமா அதிபர் இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை முடித்து உண்மைகளை முன்வைப்பதற்கான திகதியை வழங்குமாறு அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு அரசாங்க சட்டத்தரணிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.