சோசலிச இளைஞர் சங்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரிடம் அவசர அறிக்கை கோரியுள்ளது.
இந்த அறிக்கையை நாளை (26) காலை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் நிலைமையை ஆராய அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.