பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
இந்தியாவை பங்களாதேஷின் நம்பகமான நண்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுடில்லியின் பங்களாதேஷ் இல்லத்தில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அவருக்கு வழங்கிய இரவு விருந்தின் போது இந்திய ஊடகவியலாளர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு பிரதமரின் செய்தித் தொடர்பாளர் இஹ்சானுல் கரீம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
பிரதமரை மேற்கோள் காட்டி, அவர் கருத்து வெளியிடும் போது, பங்காளதேஷின் மிகப்பெரிய அண்டை நாடு மற்றும் நட்பு நாடு இந்தியா, இந்தியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது பங்களாதேஷுக்கு டில்லி அளித்த முழுமையான ஆதரவின் அடிப்படையில் காணக்கூடிய அரசியல் உறவைத்தாண்டி பங்களாதேஷ் இந்தியாவுடன் ஒருதனி உறவைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் எந்த பிரச்சினையும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பங்களாதேஷ் பிரதமர் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்திதிருந்தமை குறிப்பிடத்தக்கது.