பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாவிகளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன்றத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயமான தியவன்னாவ வாவியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை உடனடியாக தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
முதற்கட்ட நடவடிக்கையாக தியவன்னாவ வாவி அமைந்துள்ள பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயம் குறிக்கும் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.