இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் தரம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சட்ட ரீதியாக பதிலளிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தரமற்றது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் இன்று (திங்கட்கிழமை) பதிவிட்டுள்ள அவர், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் தரம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்து குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.