பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் கடன் நிலைமை மேலும் அதிகரிப்பது கவலைக்குரிய விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவினால் இந்த ஆண்டு 3.8 பில்லியன் டொலர் இலங்கைக்கு உதவி வழங்கப்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்தங்களின்போதும் இந்தியா அயல் நாடுகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதம், தொற்றுநோய் போன்ற உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்ள, ஒன்றிணைவு, கூட்டு ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியம் என்பன அவசியம் என்றும் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.