இளவரசர் மொஹமட் பின் சல்மான், அரசர் சல்மான் உத்தரவின் பேரில் சவூதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசர் மொஹமட் பின் சல்மான் முன்னதாக துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் அவருக்குப் பதிலாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவரது இளைய சகோதரர் காலித் பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக இளவரசர் அல் சவுத்தும் நிதி அமைச்சராக மொஹமட் அல் ஜடான் மற்றும் முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ் உம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரச தலைவராக இருக்கும் மன்னர் சல்மான் முன்னரைப்போல அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சல்மானின் வயது முதிர்வு காரணமாக இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் தெரிவிக்கின்றன.