ராணி எலிசெபத்தின் மறைவிற்கு பிறகு முதல் முறையாக வின்ட்சர் கோட்டை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.
கோட்டை மற்றும் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறக்கப்படுகின்றது.
ராணியின் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிடுவதும், ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அவரது பெயர் பொறிக்கப்பட்ட லெட்ஜர் கல்லைப் பார்ப்பதும் இதுவே முதல் முறையாகும்.
விண்ட்சர் கோட்டைக்கான நுழைவுச் சீட்டில் தேவாலயத்திற்கான நுழைவு சேர்க்கப்பட்டுள்ளது.
வாரத்தில் பெரியவர்களுக்கு 26.50 பவுண்டுகள் மற்றும் சனிக்கிழமைகளில் 28.50 பவுண்டுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சிறுவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளின் விலை வாரத்தில் 14.50 பவுண்டுகள் மற்றும் சனிக்கிழமை 15.50 பவுண்டுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.