ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவை (Masatsugu Asakawa) ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார்.
இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கிய நிதி உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டிற்கும் வங்கிக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடினார்.
ஜனாதிபதிக்கு பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாக உறுதியளித்தார்.