அரசிலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு கூடவுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசிலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு எதிர்வரும் 4ஆம் திகதி 2 மணிக்கு கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ள இந்த ஆலாசேனைக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த சட்டமூலம் தொடர்பான தங்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சக்தி மற்றும் வலுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு கூட்டம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன் கடந்த 29ஆம் திகதி முதல் தடவையாக கூடிய தேசிய சபையின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.