உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வகுக்காவிட்டால், முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவைப் போன்று ஆசியப் பகுதியும் நிலையற்றதாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, வளர்ச்சியடைந்துள்ள ஆசிய நாடு இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
யானைகள் சண்டையிட்டால் புல் நசுக்கப்படும் என்ற பழமொழியை குறிப்பிட்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
உலகளாவிய போட்டியானது எதிர்காலத்தில் நெருக்கடியைக் குறைக்க முக்கிய நாடுகளின் இயலாமையை வெளிப்படையாக காட்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.