சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றது.
இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான வரிகள் அரசாங்கத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், அதன் அமுலாக்கம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் கீழ் 120 மில்லியன் ரூபாயிற்கும் அதிகமான வருடாந்த புரள்வு மீது 2.5 வீதம் வரி அறவிடப்படும்.