புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பிற்கு எதிரானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டமூலத்தை 3 மற்றும் 4 பிரிவுகள் வன்முறையில் ஈடுபடுபவர்களை கிளர்ச்சியாளர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என வரையறுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஆகவே இந்த சட்டமூலம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 4, 12 மற்றும் 14 க்கு முரணானது என்றும் எஸ். எம். மரிக்கார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.