புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் போராட்கார்களை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும் என சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
போராட்ட செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்க இந்த சட்டமூலம் அனுமதிக்கும் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலத்தை செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்துவோர், முன்னாள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், வன்முறை குழுக்களின் உறுப்பினர்களை மறுவாழ்வு அளிப்பதே பணியகத்தின் நோக்கமாகும்.
இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் எந்தவொரு உறுப்பினரையும் புனர்வாழ்விற்காக வழிநடத்தும் அதிகாரம் பணியகத்திற்கு வழங்கப்படும்.
இதேவேளை புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பிற்கு எதிரானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.