நுகர்வோர் செலவினங்களில் கூர்மையான எழுச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை அடுத்த மாதங்களில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கும் என அரசாங்கம் வெளியிட்ட ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது.
தனியார் நுகர்வு அதிகரிப்பு மற்றும் அதிக திறன் பயன்பாட்டு விகிதங்கள் கடந்த தசாப்தத்தில் தனியார் துறை மூலதனச் செலவுகள் அதன் மிக உயர்ந்த மட்டங்களில் ஒன்றை அடைய உதவியது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்க செலவினங்கள் 35சதவீதம் அதிகரித்ததன் மூலம் வணிக முதலீடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கான வரி வருவாய் வளர்ச்சி உற்சாகமாக இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
அதிக அளவிலான அந்நியச்செலாவணி இருப்பு, நீடித்த அந்நியநேரடி முதலீடு மற்றும் வலுவான ஏற்றுமதி வருவாய் ஆகியவை மேம்பட்ட பொருளாதாரங்களில் பணவியல் கொள்கையை இயல்பாக்குவதற்கும் மற்றும் புவிசார் அரசியல் மோதலால் எழும்நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விரிவுபடுத்துவதற்கும் ஒரு நியாயமான இடைவெளியை வழங்கியுள்ளன.
நடப்பு நிதியாண்டில் மார்ச் 2023வரை நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்குள் இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை திடீரென நிறுத்தாமல் அதன் பணப்புழக்க அளவுகளை அளவீடு செய்வதில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது, நாட்டில் பணவீக்க அழுத்தங்கள் குறைந்து வருவதாகவும் அறிக்கை கூறியது.
ஆனால் குளிர்கால மாதங்களில், எரிசக்தி பாதுகாப்பில் சர்வதேச கவனம் செலுத்தப்படுவதால், புவிசார் அரசியல் பதட்டங்கள் உயரக்கூடும் என்றும், அது ‘இந்தியாவின் ஆற்றல் தேவைகளை இதுவரை கையாளும் திறமையை’ சோதிக்கக்கூடும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
‘இந்த நிச்சயமற்ற காலங்களில், திருப்தியுடன் நீண்ட காலத்திற்கு உட்கார முடியாது. நித்திய மேக்ரோ பொருளாதார விழிப்புணர்வு என்பது ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான விலையாகும்’ என்று அது மேலும் கூறியுள்ளது.