ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஆறு நாடுகளே வாக்களிக்கும் என இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் 46ஃ1 தீர்மானத்தின்படி இந்த பொறிமுறையை அமைத்துள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு வழமையாக வாக்களிக்கும் பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை உறுப்பினர்களாக இல்லை என்றும் இந்தியாவும் வாக்களிக்காமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு நேபாளமும் ஒரு பிராந்திய சக்தியிடமிருந்து அவ்வாறு செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதால் விலகிக்கொள்ளும என்பதோடு, பாரம்பரியமாக இலங்கையுடன் இருக்கும் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளும் வாக்களிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தீர்மானம் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக 47 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இருந்து போதுமான எண்ணிக்கையிலான வாக்குகளை இலங்கையால் சேகரிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களை மேறகோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.