கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 90 வீத வளர்ச்சியை காட்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களுக்கு பலன் கிடைத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சரக்கு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இம்மாதத்திற்குள் 25 சதவீத இறக்குமதி செலவைக் குறைக்க முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வருடம் ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை நாட்டின் மொத்த வருமானம் 1232.4 பில்லியன் ரூபாய் என்றும், வருமானத்தை குறைந்தது 400 பில்லியனாக அதிகரிப்பதற்கான சவாலை நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.