அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டமை மனித உரிமையில் அக்கறை கொண்ட அனைவருக்கும் கிடைத்த பாரிய வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
இந்த அறிவித்தல் மிகவும் ஆபத்தானதும் முற்றிலும் சட்டவிரோதமானதுமானதும் என தெரிவித்திருந்த அவர், அது நடைமுறைப் படுத்தப்பட்டால் கொழும்பு முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் முற்றாக அழிக்கப்படும் நிலை அந்த வர்த்தமானி அறிவிப்பில் பிரதிபலித்தது என்றும் அதன் காரணமாகவே குறைத்த வர்த்தமானியை ஜனாதிபதி இரத்து செய்துள்ளதாகவும் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை ஊடகங்கள் மக்களுக்கு உரிய முறையில் விளக்கமளித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.