அரசியலமைப்பின் உத்தேச 22வது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதன் உள்ளடக்கங்களை விளக்கவுள்ளார்.
ஜனாதிபதி கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரங்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது என சில எம்.பி.க்களும், அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக பெரிய மோதல்கள் அல்லது கிளர்ச்சிகளை சமாளிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.