உக்ரேனை நோக்கி ரயில் மூலமாக அணுவாயுதங்களை ரஷ்யா எடுத்துச் செல்வதாகக் கூறப்படும் தகவல்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அது ஆதாரம் இல்லாத தகவல் என்பதனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
ரஷ்யத் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான இராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படுவது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக ரஷ்யப் படைக்குப் பின்னடைவு ஏற்பட்டிரக்கும் ஹெர்சன் பகுதிக்கு அந்த அணு ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
புதிதாக இணைத்துக் கொண்ட உக்ரேனிய பகுதிகளை பாதுகாப்பதற்கு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.