ஒரு தனி நபரின் தேவைக்காக 22வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அதற்கு ஆதரவுஇ வழங்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
உரிய திருத்தத்தை முன்வைத்து நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்வதே சில கட்சிகளின் நோக்கம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தை கொண்டு வருவது தேசத்திற்குள் பிரிவினைவாதத்தையே தோற்றுவிக்கும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மக்கள் அரசியலமைப்பு திருத்தத்தை கோராத நிலையில் எனவே ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்ய இதை முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.