திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால், மக்களின் நிம்மதி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் துன்பமும் வேதனையும் அனுபவித்து வருவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.