கிளிநொச்சியில் பணம் மற்றும் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்மடு நகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஐந்து பவுன் தங்க நகைகள், 49ஆயிரத்து 500 பணம், பெறுமதிமிக்க இரண்டு தொலைபோசிகள் மற்றும் உரிமையாளரின் பாவனையிலுள்ள மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருள் திருடப்பட்டுள்ளன.
நூதனமான முறையில் இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவம் குறித்து, தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தடயவியல் பொலிஸார் மற்றும் தருமபுர பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்