விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவேண்டும் என அகில இலங்கை தொழிலார் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் ஒழுங்காக வழங்கப்படாமையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், விவசாய உற்பத்திகளும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உரத்தை இறக்குமதி செய்து அதனை விவசாயிகளுக்கு வழங்கி வைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.