மன்னார் மெசிடோ நிறுவனத்தால் யாழ்.பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
பொலிகண்டி கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் வசிக்கும் வருமானத்தை இழந்த 75 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிராடோவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கையில் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை விட்டு விலகுமாறு வற்புறுத்துவதோடு எங்களது சொந்தக் காணிகளை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து மரக்கன்றுகளை உருவாக்கி அனுபவித்து வருகின்றார்கள்.
எனவே ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு எமது காணிகளை மீட்டு எமது மீள் குடியேற்றத்துக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.