வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முழங்காவில் கிராமத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் என்பதோடு ‘ 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது என்ற பல கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்திருந்தனர்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள்,இளைஞர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.