இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தேயிலை 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 557.38 ஆக இருந்த நிலையில், தற்போது சராசரியாக 1,599.49 ஆக விற்கப்பட்டதாக சிலோன் டீ நிறுவனம் கூறியுள்ளது.
இதுவே கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கிலோகிராம் 1,508.21 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் செப்டெம்பர் மாதம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டு 621.1 ஆக இருந்த குறைந்த ரக தேயிலை செப்டம்பர் மாதத்தில் ஒரு கிலோகிராம் 1,706க்கும் நடுத்தர ரக தேயிலை, 1,336.9 க்கு விற்பனை செய்ய்யப்பட்டுள்ளது.
குறைந்த விலையுள்ள உயர் ரகங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கிலோகிராமுக்கு 557.3 ஆக இருந்த நிலையில் சராசரியாக ஒரு கிலோவுக்கு 1,448.1 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று ரக தேயிலையும் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.