நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அ.தி.மு.க. வலுவாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு தான். அதனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். முடக்கப்பார்த்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்து அ.தி.மு.க.வை அழிக்கப்பார்த்தார்.
அத்தனை அவதாரத்தையும் தவிடு பொடியாக்கிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறார்கள். அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி.
இதற்காக எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக நாட்டு மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய எண்ணமெல்லாம் இந்த தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்பதுதான்.
யாரை கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கிராமம் முதல் நகரம் வரை வசிக்கும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.என தெரிவித்தார்.