பேஸ்புக் வளைதளத்தை நிர்வாகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் பிரஜைகள் ரஷ்யர்களுக்கு எதிராக வெளியிடும் வன்முறைத் தகவல்களை பேஸ்புக் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு குறித்த பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்திற்கு மொஸ்கோ நீதிமன்றம் விதித்து இருந்த தடையை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்ய அரசாங்கம் இணைத்துள்ளது.