பூமிக்கு வெளியே அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது, விண்கலத்தை மோதி, திசை திருப்பும் முயற்சியில், நாசா வெற்றி கண்டுள்ளது.
பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் தூரத்தில் சுற்றித்திரியும், டிமார்ஃபாஸ் என்ற விண்கல்லை குறிவைத்து, ரொக்கெட் மூலம் டார்ட் விண்கலத்தை, செப்டம்பர் 26ஆம் திகதி நாசா விண்ணில் செலுத்தியது.
விண்கலம் வெற்றிகரமாக மோதிய நிலையில், விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாக, நாசா தெரிவித்துள்ளது.