கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக கொப்பம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கலாபுர்கி, யாத்புரி, கொப்பல், குடகு, வல்லாரி, சித்ரதுர்கா, சிக்கமங்களூரு, சிக்கபள்ளாபூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்திலும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், பெருக்கெடுத்த வெள்ளம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது.
சுமார் 4 அடிக்கு தேங்கி நிற்கும் மழைநீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கிவிட்டன.
பருவம் கடந்து பெய்து வரும் மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுவட்டார விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.