நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
தரம் குறைந்த எரிபொருள் விநியோகம் தொடர்பாக சுமார் 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தரம் குறைந்த எரிபொருளை விநியோகிக்கின்றனவா என்பதை சோதனை அறிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.