யாழில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம் கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்தார்.
பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடம்(13) இன்று கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது அவர் இதனை நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி காணப்படுகின்றதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை 45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டுவந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் சொந்தமானதொரு புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.