ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசியில் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு கூட்டணி அமைப்பது என்பது குறித்து அவர்கள் இதன்போது ஆலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேட்புமனு வழங்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் விமர்சிக்கும் அல்லது கட்சியைவிட்டு வெளியேறிய எவருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்புமனுக்களை வழங்கக்கூடாது என இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விமர்சித்து ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுக்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் வேட்புமனு வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைத்தால், அக்கட்சிகளுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில் அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்படும் என முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.