இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று ( திங்கட்கிழமை) காலை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல மில்லியன் ரூபா வரையில் மின்கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், அதனை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தி, ஒளிபரப்பு சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகள் மின்சார சபையுடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.