நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரிடம் பணத்தினை வைப்பிலிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை கிடைத்த தகவலின்படி, அவர் ஏமாற்றிய தொகை 300 முதல் 500 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் நடிகைகள், பலம் வாய்ந்த வர்த்தகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் திலினியின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திலினி பிரியமாலி, பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவருக்கு கலாநிதி பட்டம் பெறுவதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது திலினி பிரியாமாலியிடம் வைப்பிலிட்டவர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை பொலிஸார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரிக்கவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.